நாமக்கல் நகரில் மையப்பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்ச நேயர் இரு கைகளையும் குப்பியவாறு பக்தர்களுக்கு அருள் பாளித்து வருகிறார்
ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழாவாக வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதையொட்டி
5 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப் பட்டது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர் அனைவரும் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் என கோஷங்களை எழுப்பினர்
இதனைத் தொடர்ந்து காலை பதினொரு மணி அளவில் ஆஞ்சநேயருக்கு பால் வெண்ணெய் சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார் நாமக்கல்ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்
அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு 492 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது
ஒரு வழியாக பாதையாக போடப்பட்டு நகருக்குள் ஒரு வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன