கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே மேலூர் மேட்டு தெரு செல்வ ஆஞ்சநேயர் ஆலயம் அனுமன் ஜெயந்தி விழா..
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வேலூர் மேட்டு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் ஆலய ஹனுமத் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ராம நாம ஹோமம் மகா திருமஞ்சன அபிஷேகம் பூஜைகள் செய்து செல்வ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .
இவ்விழாவில் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, நீர்வளத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் கிராமவாசிகள், நாட்டாமைகள் ,ஆஞ்சநேயர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மேலூர் மேட்டுத்தெரு கிராமவாசிகள், நாட்டாமைகள் செய்திருந்தனர்.