வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஜெயந்தி 53-வது ஆண்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராம பவனத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஜெயந்தி 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காலை 9 மணிக்கு மேல் ஓமம், அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு தீபாராதனை மற்றும் அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கும்பகோணம் மண்டலி குழுவினரின் சிவ லலிதா, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்,ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேய தாசன் என். ராமச்சந்திரன்,ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய ஸ்வாமி அறக்கட்டளையினர், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய சுவாமி திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.