எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்தார்கள்;. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகிக்க மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செம்பனார்கோவில் வட்டம் ஆக்கூர் ஊராட்சி,சீர்காழி வட்டம் பூம்புகார் ஊராட்சி, புங்கனூர் ஊராட்சி, பெருமங்கலம்; ஊராட்சி, கொண்டல் ஊராட்சி, வள்ளுவக்குடி ஊராட்சி, கொள்ளிடம் வட்டத்தில் ஆச்சாள்புரம் ஊராட்சி மற்றும் காட்டூர் ஊராட்சி உட்பட 8 ஊராட்சிகளில் மொத்தம் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழுத் தலைவர்கள் நந்தி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்திரன், ஜெயப்பிரஷ், ஒன்றிய செயலாளர்கள் மாலிக், அன்பழகன், அமிர்த விஜயகுமார், பஞ்சு குமார், பிரபாகரன், மலர்விழி திருமாவளவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.