திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இன்று திருவாரூர் நகர காவல் துறையினர் சாதாரண பணியில் இருந்த பொழுது, அரசு பேருந்தில் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து, நகர காவல் துறையினர் பேருந்துகளில் சோதனை மேற்கொண்டார்கள் .
அதன்படி அரசு பேருந்தில் இரண்டு பெண்கள் 10 ஆயிரம் மதிப்பிலான பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்தார்கள்.
கையும் களவுமாக பேருந்திலேயே இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்களை கைப்பற்றினார்கள் விசாரணையில் இந்த இரண்டு பெண்களும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தீபா திவ்யா என தெரியவந்தது அதன் பிறகு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தார்கள்..