கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் குளத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் தவறி விழுந்து இறந்த குழந்தைக்கு நீதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் செயலரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தில்லையம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாடாகுடி கிராமத்தில் குளத்தில் சுற்றுச்சுவர் அமைக்காமல் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குளத்தில் தவறி விழுந்து இறந்த குழந்தை இனியவன் (வயது 3) இறப்பிற்கு காரணமாக இருந்த தில்லையம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி ஆகினி கரிகாலன் மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்மோகன் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது இறப்பிற்கு காரணமாக இருந்த தில்லையம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தியாயினிகரிகாலன் மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்மோகன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் , இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முல்லைவளவன், முன்னாள் மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் , ஒன்றிய செயலாளர் ஒளிவளவன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் குழந்தையின் திருவுருவப்படத்தை வைத்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.