எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் இராம. இளங்கோவன், திமுக மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ, சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.
திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களுக்கு வீடு வீடாக எடுத்துக் கூற வேண்டும். மீண்டும் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்கும் வகையில் கழக நிர்வாகிகள் கடுமையாக பாடுபட வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் சீர்காழி நகர கழக செயலாளர் சுப்பராயன், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, துணை செயலாளர்கள் முருகன், சசிகுமார், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.