தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் இருபதாம் ஆண்டு விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
கல்வியோடு கலைகளையும் கற்பிக்கும் புதுவை ஆதித்யா பள்ளியின் 20ஆம் ஆண்டுவிழா 04.01.2025 மற்றும் 05.01.2025 ஆகிய இரண்டு நாட்களில் “மாற்றத்தின் அலைகள்”(WAVES OF CHANGE) என்ற கருத்தை மையமாக ஏற்று மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. திரைத்துறையில் சிறந்த விளங்கும் தொழில் நுட்ப கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான டிஜிட்டல் மேடையில் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆண்டு விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, ஆதித்யா பள்ளிநிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யநாராயணா அறக்ககட்டளை ட்ரஸ்டி அனுதாபூனமல்லி, ஆர்த்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளைப் பாராட்டி சிறப்பித்தனர்.
ஆதித்யா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில்-16 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூாயில்-56பேர், ஐ.ஐ.டி.யில்-8 பேர், ஐ.ஐ.ஐ.டி.-4 பேர், என்.ஐ.டி.-27பேர், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.-1(கொல்கத்தா), தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்-2 பேர், சாரணர் சாரணியர் இயக்கம்-4 பேர், தேசிய மாணவர் படை-4 பேர் என பல்துறையில் சாதனை படைத்த முதன்மை மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஆதித்யா பள்ளியில் 10 ஆண்டுகள் கல்வி பணியாற்றிய ஆசிரிய பெருமக்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டன. பள்ளி முதல்வரால் ஆண்டு அறிக்கை விளக்கப்பட்டது.
ஆதித்யா கலைத்துறை இயக்குநர் கலைமாமணி டாக்டர் இராஜமாணிக்கம் ஒருங்கிணைப்பில் 2050க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒற்றுமை மற்றும் கலைநயம் மேம்பட ஆடல், பாடல், நாடகம் மற்றும் இசைக்கருவிகள் வாசித்து தங்கள் படைப்பாற்றல் திறமைகளைப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
ஆண்டு விழாவில் 100 மழலையர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு,100பேர் பங்கேற்ற குழு இசை சங்கமம், 100 பேர் பங்கேற்ற மெகாகொயர், 100பேர் பங்கேற்ற யோகா, 54 பேர் பங்கேற்ற சுடுகளிமண் கண்காட்சி, பாசத்தின் விலை நாடகம், வீரமங்கை வேலுநாச்சியார் நாடகம், சாலை பாதுகாப்பு நாடகம் மற்றும் கலையம்சம் மிகுந்த கலாச்சார கருத்துகள் நிறைந்த நடனங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வண்ணம் இயல், இசை, நாடகம், நாட்டியம் என முத்தமிழ் விழாவாக நடைபெற்றது.
கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள் மற்றும் வருகை புரிந்த ஆசிரிய பெருமக்கள், அரங்க அமைப்பாளர்கள், விழா குழுவினர் மற்றும் வருகை புரிந்த ஒளி ஒலி அமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் விழா இனிதே நிறைவுற்றது.