கோவை சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் ரோட்டரி கிளப் கோயமுத்தூர் சாட்டிலைட் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது..

ரோட்டரி கிளப் ஆப் சாட்டிலைட் சார்பாக கல்வி களம் எனும் திட்டத்தில் கோவை சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது..

சுமார் 1122 சதுர அடியில் 24 இலட்சம் மதிப்பீட்டில் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறைகளின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

ரோட்டரி கிளப் ஆப் சாட்டிலைட் தலைவர் பரணி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலாளர் ராம் சிவ பிரகாஷ் முன்னிலை வகித்தார்..

விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பரணிகுமார்,
ரோட்டரி கிளப் கல்வி வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும்,அதன் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வகுப்பறைகள் எதிர் காலத்தில் மேல் தளங்கள் அமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

இதனை தொடர்ந்து பேசிய கவர்னர் சுந்தரவடிவேலு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் மாநாகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்துவதில் ரோட்டரி அதிகம் கவனம் செலுத்துவதாகவும்,அதே நேரத்தில் அரசும் அதற்குரிய வழமுறைகளை எளிதாக்கி உள்ளதால் இது போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிவதாக தெரிவித்தார்..

நிகழ்ச்சியில்,மாவட்ட பொது செயலாளர் சுப்ரமணியன்,
துணை ஆளுநர் திருமுருகன்,ஜி.ஜி.ஆர்.விஜய் பாலசுந்தரம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா உட்பட ரோட்டரி கிளப் சாட்டிலைட் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *