திருச்சி லோக்சபா எம்.பி. துரை வைகோ தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் வளர்ச்சி ஆலோசனைகூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர் (பொ) கோபால கிருஷ்ணன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பொதுமக்களின் நலனுக்காக திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி விவாதிக்க ப்பட்டது. அப்போது கும்பகோணம் கிரேட் விங்ஸ் டிராவல்ஸ் நிர்வாக இயக்குனரும் தமிழ்நாடு டாபி
மாநிலத் தலைவருமான ஜே. ஜாஹீர் உசேனை திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்.பி.நியமனம் செய்துள்ளார்.