பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க ஜனாதிபதிக்கு காங்கிரஸ் நிர்வாகி ராஜ்குமார் கோரிக்கை புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி உப்பளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பியும், டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு வாக்கு அளித்தால் இந்த தொகுதியில் உள்ள சாலைகளை காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கன்னங்கல் போல் பளபளப்பாக மாற்றிக் காட்டுவேன் என்று கீழ் தரமான முறையில் ஆபாசமாக பேசி இருக்கிறார்.
பெண்களைப் பற்றி இழிவான முறையில் பேசுவது பிஜேபி தலைவர்களுக்கு கைவந்த கலை மற்றும், இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் முற்றிலும் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரையே இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்றால் சாதாரண பெண்களை பிஜேபி தலைவர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள் நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மரியாதைக்குரிய எங்கள் தலைவி பிரியங்கா காந்தி அவர்களை இழிவு படுத்தி பேசிய ரமேஷ் பிதுரி மீது உடனடியாக பெண்கள் பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். மற்றும் பாஜக தலைவர்கள் நாட்டு மக்களிடையே இவர் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்று பேசியதற்காக பாஜக தலைவர்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. ஆதலால் இனி வரும் காலங்களிலாவது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *