கோவை கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ள எம்.ஜி.எம்.மெட்ரிக் மேல் நிலைபள்ளியில் 29 ஆம் ஆண்டு எம்.ஜி.எம்.ஃபெஸ்ட் வெகு விமரிசையாக நடைபெற்றது…
கோவை கே.என்.ஜி.புதூர் பகுதியில் அமைந்துள்ளது எம்.ஜி.எம்.மெட்ரிக் மேல் நிலை பள்ளி.
பள்ளியின் தாளாளர் சஜி டேவிட் தலைமையில் கடந்த 29 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கற்று கொடுப்பதோடு அவர்களது பல்வேறு திறமைகள் மற்றும் விளையாட்டு திறன்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எம்.ஜி.எம்.பள்ளியின் 29 ஆம் ஆண்டு எம்.ஜி.எம்.ஃபெஸ்ட் 2024-25 விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் சஜி டேவிட் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை தலைவர் பிஜு மத்தாய் புலிக்கல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ரங்கநாதன் குழுமங்களின் தலைவர் முருகேசன், தடாகம் சி.எஸ்.ஆச்சார்யா ஆஸ்ரம் ஆயர் மகேஷ்,புனித மேரி கதீட்ரல் ஆலய பொறுப்பு ஆயர் ரெஞ்சித் கே.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் முதல்வர் ஷீலா ஆண்டனி வரவேற்று பேசினார்..
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முக்கிய விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கடந்த ஆண்டு பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்…
தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் வண்ண ஆடைகளை அணிந்த மாணவ,மாணவிகள் இந்திய ஒற்றுமையை போற்றும் விதமாகவும்,பசுமையை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடனம் ,நாடகம், போன்ற கலை நிகழ்ச்சகளை நடத்தி அசத்தினர்..விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்….