விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ஸ்ரீ கோதண்டராமர் ஸ்ரீ பூதேவி ஸ்ரீ தேவிக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5-10 மணி அளவில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதிகாலை நேரத்தையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிங்க ராஜா கோட்டை ராஜுக்கள் பொதுப்பண்டு மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.