நாமக்கல் மாவட்டம் பரமத்தி – வேலூர் வட்டம், ஓவியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே, பரமத்தி மற்றும் வேலூர் ஆகிய பேரூராட்சிகளுக்கான, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், பொதுமக்கள், நீர்நிலைகள், குடிநீர், விவசாய நிலம், கால்நடைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருமணிமுத்தாறு, இடும்பன் குளம் மீட்பு குழுவினர், விவசாயிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்