மதுரை புதுஜெயில் ரோடு மதுரா கோட்ஸ் மில் காலனி குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மில்காலனியில் நடந்த பொங்கல் விழாவில் சங்கத்தலைவர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசி விழாவை துவக்கி வைத்தார்.
செயலாளர் ஷியாம் சுந்தர், பொருளாளர் ஏஞ்சல் தவச்செல்வி,
துணைத் தலைவர்
கள் இராஜசேகரன்,
ராணி, மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில்
இணைச் செயலாளர் நித்தியானந்தன் நன்றி கூறினார்.
