சுரண்டை அருகே உள்ள இ .மீனாட்சிபுரத்தில் தை பொங்கலை முன்னிட்டு ஸ்ரீ ராமபிரான் சப்பர வீதி உலா.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இ. மீனாட்சிபுரத்தில் ஶ்ரீ ராமர் , முப்பிடாதி அம்மன் ,மாரியம்மன் ,காளியம்மன்கோவில் உள்ளது இக்கோவிலில் மார்கழி 30 நாட்கள் பஜனை இருந்து தை பொங்கல் காலையில் மாலையில் சப்புறத்தில் அலங்கரிக்கப்பட்ட சத்திரத்தில் ராமபிரான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நாடார் வாலிபர் சங்கம் இணைந்து 16ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகளை சுரண்டை உதவி ஆய்வாளர் திரு குமரேசன் அவர்கள் தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் சமுதாய நாட்டாமை முன்னிலையில் கொடுக்கப்பட்டது.