தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தலைமை காவலர் அய்யாசாமி ஆகியோர் மதுவிலக்கு, ரேஷன் அரிசி கடத்தல் லாட்டரி சீட்டு வியாபாரம் சம்பந்தமாக கண்காணித்து ரோந்து வந்தனர்
அப்போது தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி, மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த, லட்சுமணன் மகன், ஆறுமுகம் (வயது 66,) திண்டுக்கல் மாவட்டம், நத்தம், வேலம்பட்டி போஸ்ட், சிறுவீட்டு புதூர், தோத்தன் மகன்,நல்லியப்பன் (வயது 36), ஆகிய இருவர்களும் சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 1440 மதிப்புள்ள 36 லாட்டரி டிக்கெட்டுகளை, விற்பனைக்கு வைத்திருந்ததால் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்