திருச்சி மாவட்டம் துறையூரில் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை (ஜனவரி -17) முன்னிட்டுதுறையூர் எம்ஜிஆர் மன்றம் சார்பில் துறையூர் என். சங்கர் தலைமையில் சிலோன் ஆபிஸில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் இளங்கோவன் 6 வது வார்டு கழக செயலாளர் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் சங்கிலி கருப்பையா மகேந்திரன் 8 வது வார்டு செயலாளர் ராஜேந்திரன் 5 வது வார்டு செயலாளர் கனகராஜ் 9 வது வார்டு செயலாளர் வடிவேல் 7 வது வார்டு கழக செயலாளர் மகளிரணி வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மண்டல செயலாளர் நாகராஜ், மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் குருசாமி,நகர மாவட்ட பிரதிநிதி மருத முத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் இளங்கோவன்,நகர இளைஞரணி செயலாளர் விவேக், மாவட்ட வழக்கறிஞர் அணி வக்கீல் மனோகர்,மாவட்ட மருத்துவரணி பொருளாளர் டாக்டர் ஜெய்ச்சரண், 22 வது வார்டு கழக செயலாளர் இன்ஜினியர் அரவிந்த் ,ஆயில் கடை பாலு, 3வது வார்டு கழக செயலாளர் ஜெய சூர்யன், இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் வடிவேல், நகர இலக்கிய அணி தலைவர் ஜெ. சங்கிலி, பிரதிநிதி சந்தானம் , தொழில் சங்க சேகர், ஜெகநாதன், விநாயகர் தெரு கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து சிங்கார தோப்பு திடலில் வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்