தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் எஸ் எஸ் மழலையர் பள்ளியில் வைத்து மல்லிகா முதியோர் இல்லம் , மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை , சில்ரன், சாரிடபிள் டிரஸ்ட் , ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் ,எஸ் எஸ் மழலையர் பள்ளி, வாசன் கண் மருத்துவமனை, நெல்லை கேன்சர் சென்டர், ஆகியோர் இணைந்து நடத்தும் கண் மற்றும் கேன்சர் இலவச மருத்துவ முகாம், கின்னஸ் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குதல் மற்றும், துப்பரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் நடைப்பெற்றது.

மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா தலைமை தாங்கினார்.

எஸ் எஸ் மழலையர் பள்ளி தாளாளரும் பாவூர் சத்திரம் ரோட்டரி கிளப் தலைவருமான சந்தனம், செயலாளர் அய்யத்துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கினைப்பாளர்
டிக்சன் குமார், வரவேற்றார்.

மாவட்ட மிஷன் ஒருங்கிணை ப்பாளரும் பெண்களின் அதிகாரமளிப்பதற்கான மைய அலுவலர் புஷ்பராஜ்
தென்காசி மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையம் சமூக நலன்துறை,நிர்வாகி ஜெயராணி,இந்திய செஞ் சிலுவை சங்கம் தென்காசி செயலாளர் ரவிசந்திரன்,ரோட்டரி துணை ஆளுநர்
மீரான்கான் சலீம்,(ரோட்டரி துணை ஆளுநர்)
சுந்தர்ராஜ், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்

நெல்லை கேன்சர் சென்டர் சிறப்பு மருத்துவர் காயத்திரி தலைமையில் பரிசோதனை மருத்துவர் அபிராமி, ஆய்வக நிபுணர் மெரின், செவிலியர்கள் மஞ்சு, சக்தி, ஆகியோர்
வாய் பரிசோதனை, மார்பகம் பரிசோதனை, ஹெர்ப்ப வாய் பரிசோதனை, செய்தனர்.

அதனை தொடர்ந்து வாசன் கண் மருத்துவமனை செயல் அலுவலர்
ரியாஸ் தலைமையில் ஆலோசகர் கஸ்தூரி, டெக்னிசன் ஆனந்தி, சுபிதா, கண்ஒளி பரிசோதகர் ஷீலா ஆகியோர்
கண்புரை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை, போன்ற பல்வேறு கண் பரிசோதனை செய்தனர்.

பின்னர் கின்னஸ் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குதல் மற்றும், துப்பரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் நடைப்பெற்றது.

நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் உறுப்பினர்கள்
அரங்கநாதன். கார்த்திக், முருகன், சுபாஷ், வைரச்சாமி சிதம்பரம். எஸ் எஸ் மழலையர் பள்ளி, ஆசிரியர்கள்.மல்லிகா முதியோர் இல்லம் நிர்வாகிகள் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை , அலுவலர்கள். சில்ரன், சாரிடபிள் டிரஸ்ட் பணியாளர்கள் ,
பொதுமக்கள், ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

முடிவில் மல்லிகா முதியோர் இல்லம் நிறுவனர் டாக்டர் அன்னை ஐய்யப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *