கீழச்சுரண்டையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் டாக்டர் பால் தினகரன் தலைமையிலான சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒய்வு பெற்ற ஆசிரியை ஞான சிகாமணி தலைமை வகித்தார் பக்தசிங் முன்னிலை வகித்தார் மேலாளர் ஜெசி வரவேற்றார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி உபகரணங்கள் மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தர்ஷிகாவிற்கு சொந்த பணத்தில் ஊக்க தொகை வழங்கி வாழ்த்தி பேசினார் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளரும் சுரண்டை ஒய்எம்சிஏ செய்தி தொடர்பாளருமான ராஜகுமார், தென்காசி தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன், கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் ரஹ்மான், வீராணம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகைதீன், ரமேஷ், பாஸ்டர் ஆபிரகாம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்