பிரபு காங்கேயம் செய்தியாளர்
செல்: 9715328420
காங்கயம் அருகே பாலியல் சீண்டலில் கைது செய்தபட்ட ஆசிரியரை கல்வித்துறை சஸ்பென்ட் செய்தது
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த ஊதியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லிமடம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அறிவியல் பாட ஆசிரியர் சிவக்குமார் வயது 54 என்பவரை காங்கயம் அனைத்து மகளிர் போலிசார் திங்கட்கிழமை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் பாதுகாப்பு இல்லை என பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை விசாரித்த பள்ளி கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிவக்குமாரை சஸ்பென்ட் செய்துள்ளது. இச்செய்தி அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.