ஜனவரி 22, 2025 ஜிடிஎன் கல்லூரியின் பொருளாதாரத் துறை மற்றும் மேலாண்மை நிர்வாகம் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம் அவர்களும் கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் மார்க்கண்டயன், துணை முதல்வர் முனைவர், பொன்னையா, முனைவர். நடராஜன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் தலைமை உரையாற்றினார்.பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர். பி. ரவிச்சந்தின், தேசிய கருத்தரங்கத்தின் நோக்கம் அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசி விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.
இந்த கருத்தரங்கத்தில் மூன்று அமர்வுகள் மூன்று விதமான தலைப்புகளில் சிறப்பாக நடைபெற்றது. முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர் பாலமுருகன், அவர்கள் செயற்கை நுண்ணறிவு பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் பங்கும் அதன் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்களை பேசினார்.
இரண்டாவது அமர்வில் எம். வி. முத்தையா அரசு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி நூலகர் முனைவர். ராமசாமி, அவர்கள் நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவுன் இன்றைய கால தேவை அதற்க்குறிய வழிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக மூன்றாவது அமர்வில் கேரளா கிரிஸ்ட் கல்லூரி பொருளியல் உதவிப் பேராசிரியர் முனைவர் அருண் பாலகிருஷ்ணன் அவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றி பல்வேறு சிறப்பான கருத்துக்களை முன் வைத்து பேசினார்.
கருத்தரங்க நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . நிகழ்வின் இறுதியில் நிர்வாக மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர். காவேரி நன்றி தெரிவித்தார்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பொருளியல் உதவிப் பேராசிரியர் அருண் மற்றும் நிர்வாக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் சுபாஷினி, முனைவர் முத்துக்குமரன் செய்தார்.