திருப்பூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்காததை கண்டித்தும் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க கோரியும், மருத்துவ காப்பீடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் திருப்பூர் மண்டல பொதுச் செயலாளர் செல்லதுரை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்திலிருந்து வெளியே சென்ற பேருந்துகளை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *