கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் அவர்கள் ஆலோசனைப்படி புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவையாறு தொகுதி கழகம் சார்பில் திருவையாறு தேரடி திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு/ திருவையாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், மேற்குத் தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமானதில்லை.எஸ். சூரிய பிரகாஷ்/ தலைமை வகித்தார். /திருவையாறு பேரூர் கழக செயலாளர் ஆர் செந்தில் மணி வரவேற்புரை ஆற்றினார்/. திருவையாறு மத்திய ஒன்றிய கழக செயலாளர் என். இளங்கோவன்/திருவையாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் ராஜா/தஞ்சாவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நாகத்தி. கலியமூர்த்தி/தஞ்சாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சாமி வேல்/ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன்/தஞ்சாவூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ரெத்தினசாமி ஆகியோர், சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட கழக பொருளாளர் ஆர் எஸ் கண்ணபிரான்/மாவட்ட கழக இணைச் செயலாளர் இளமதி சுப்பிரமணியன்/ முகமது இப்ராஹிம்/ மோகன்/ செல்வராணி மனோகரன்/ஆகியோர் பங்கேற்று பேசினார்கள் முன்னதாக/ திருச்சி எம் ஜி ஆர் மாரிமுத்து/அவர்களின் எம்ஜிஆர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் கலை நிகழ்ச்சி இயக்குனர்,”கலை நண்மணி” ஏகேஆர்.ரவிச்சந்தர் தொகுத்து வழங்கினார்
நிறைவாக மேல திருப்பந்துருத்தி பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆர் அசோக்குமார் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் திமுக கட்சியிலிருந்து விலகி பலர் அஇஅதிமுகவில் இணைந்தார்கள்.