நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
திருக்குவளை அரசு பள்ளியில் நூற்றாண்டு துவக்க விழா…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அகரம் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் நூற்றாண்டுத் திருவிழா மற்றும் மாநிலம் அளவிலான பள்ளிகளின் நூற்றாண்டு துவக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கும், முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கும் மற்றும் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை செயலர் மதுமதி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழக மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.அதன் பின்னர் பேரணியாக சென்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் பயின்ற பள்ளியில் அவரது நண்பர் சுப்பையா சுடர் தீபம் ஏற்றி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சி மூலமாக பள்ளியின் நூற்றாண்டுத் திருவிழா குறித்து சிறப்புரை ஆற்றினார்.தமிழகத்தில் நூறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகளில், நாளை முதல் இதேபோல் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது.நாட்டில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிலும், நூறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகள் உள்ளன.
மாவட்ட வாரியாக நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறது.அதில், பெற்றோர்கள்,ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி பெருமைப்படுத்த இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் என் பள்ளி,என் கடமை, என் பொறுப்பு என்ற விழுதுகள் செயலியை பள்ளிக் கல்வித்துறை செயலர் மதுமதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்சியில் தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன்,தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்,தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, திரைப்பட கதையாசிரியர் பவா.செல்லதுரை, கவிஞர்கள் நந்தலாலா, சுகிர்தராணி, சல்மா, கீழையூர் வட்டார ஆத்மா குழுத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை பொறுப்பாளர் மலர்வண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் கௌசல்யா இளம்பரிதி, ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.