கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் – கிருஷ்ணராயபுரம் தொகுதி- பாலராஜபுரம் ஊராட்சி, சின்னம்மா நாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்..

கரூர் மாவட்ட கழக செயலாளர், மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி ஆகியோர் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம், பாலராஜபுறம் ஊராட்சி, சின்னமாநாயக்கன்பட்டியல் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பின்னர் மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி சட்டமன்ற உறுப்பினர்கள் குளித்தலை எம். எல். ஏ இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ , அரசு அதிகாரிகள், மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்