பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள
குண்டடம் நகரில் ரோடு விரிவாக்கப் பணிக்கு இடையூராக உள்ள வீட்டினை அகற்றிக் கொள்ளுமாறு, வீட்டில் குடியிருப்போருக்கு நெடூஞ்சாலைத்துறையினர்
அப்போது.கோட்டில் வழக்கு உள்ளபோது நெடுஞ்சாலைத்துறையினர் அத்துமீறி செயல்படுவதாக வீட்டில் குடியிருப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை தாராபுரம் ரோட்டில் பல்லடம் முதல் குண்டடம் அடுத்துள்ள திருப்பூர் பிரிவு வரையுள்ள ரோடு நான்குவழி ரோடாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு குண்டடம் வரை பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டது.
குண்டடம் முதல் திருப்பூர் பிரிவு வரையுள்ள 4.60கிலோ மீட்டர் தூரமுள்ள ரோடு அகலப்படுத்தும் பணிக்காக ரூ.39-கோடியே 80-லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் குண்டடம் நகரில் போலீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள வீடு, ரோடு பணிகளுக்கு இடையூராக இருந்ததால் அதை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்தனர்.
ஆனால் அங்கு குடியிருப்பவர்கள் வீட்டின அகற்ற வேண்டுமானால் போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி வீட்டினை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் வீட்டினை அகற்றக் கூறி அங்கு குடியிருப்போருக்கு வீட்டை காலி செய்து தருமாறு கடந்த வாரமே நோட்டீஸ் கதவில் ஒட்டப்பட்டது ஆனால் நீங்கள் வீட்டை காலி செய்யவில்லை என வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது மேலும் இன்று வீட்டை இடிப்பதற்கு கூடாது என தடை ஆணை வாங்கி வைத்துள்ளேன் இருப்பினும் நீதிமன்றத்தின் ஆணையை பார்க்காமல் நீங்கள் வீட்டை இடிக்க கூடாது என ஜேசிபி முன்பு கனகராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10-பேர் முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு வந்த தாராபுரம் வட்டாட்சியர் திரவியம் கோட்ட பொறியாளர் ராணி உதவி கோட்ட பொறியாளர் கணேசமூர்த்தி
கோட்ட உதவி பொறியாளர்.கணேசன்,உடுமலை கோட்ட பொறியாளர் ராமுவேல் மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி குண்டடம் காவல் ஆய்வாளர்.பத்ரா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை வருவாய் துறை அதிகாரிகள் வீட்டின் உரிமையாளருக்கு அளவீடு செய்து காண்பித்து அதன் பிறகு வீட்டை இடிக்க முன்வந்தனர் ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் கோர்ட் ஆணையை மீறி நீங்கள் இடிக்க கூடாது என மீண்டும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பெண்மணி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மற்றும் போராடிய
நாகரத்தினம்,(வயது70)கார்த்திக்குமார்(வயது35)பெரியசாமி(வயது 62)ராஜ்குமார் (வயது49)ராமகிருஷ்ணன்(வயது70) பழனிக்குமார் (வயது46)அய்யப்பன் (வயது48)குருசாமி (வயது52)
பராசக்தி (வயது50)பரிமளா( வயது40) சித்ரா(வயது49) ஆகிய
7- ஆண்கள் உட்பட 3- பெண்கள் ஆகியோரை குண்டடம் போலீசார் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்:-
இதில் மேற்கண்ட இடம் நத்தம் புறம்போக்கில் உள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறைக்கு நிலமாற்றம் செய்ய நிபந்தனைகளுக்கு உட்பட்ட கலெக்டர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுபற்றி வீட்டில் குடியிருப்போர் கூறும்போது,
மேற்கண்ட வீடுகளில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்து கடைகள் நடத்தி பிழைத்து வருகிறோம். அத்துடன் எங்களது பெற்றோர்கள் 3-பேரின் பெயரில் இந்த இடத்திற்கான பத்திரம் உள்ளது. ஆகவே இது எங்களது சொந்த இடமாகும். இருப்பினும் ரோடு மேம்பாட்டுக்காக ஒத்துழைத்து வீட்டினை அகற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் எங்களது இடத்திற்கான இழப்பீட்டுத் தொகையை தர மறுக்கின்றனர். அதனால் இது தொடர்பாக சென்னை ஹைகோட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். கோட்டில் வழக்கு இருக்கும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர், மேலும் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளனர் என குற்றம் சாட்டினர். குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.