மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், மதுரை மாவட்டம் – அரிட்டாபட்டி, வள்ளலார் பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம் பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார் பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொது மக்கள் சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர். உடன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி உள்ளார்.