எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு, போலீஸ் விசாரணை.
பெரம்பலூர் மேற்கு அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவர் கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி அவரது பெற்றோர்கள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பிரியதர்ஷினி யின் தம்பி ஏற்கனவே குரூப் 4 தேர்வு எழுதி இருந்ததால் அது சம்பந்தமாக கவுன்சிளிங்காக சென்னை சென்று இருந்தார்.
சென்னை வேலையை முடித்துக் கொண்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ஒன்பது பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நடந்த தகவலை அவருடைய அக்கா பிரியதர்ஷினிடம் கூற அவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுத்ததின் அடிப்படையில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.