கம்பம் அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு டிஎஸ்பி திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு காண 24 மணி நேர சீமாங் சென்டர் அவசர சிகிச்சை பிரிவு குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு தீக்காய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன
இந்த ஆஸ்பத்திரியில் தினந்தோறும் வெளி நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக 100 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் நமது அண்டை மாநிலமான கேரள மாநில எல்லையில் உள்ளதால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி வண்டிப்பெரியார் கட்டப்பனை நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள தேயிலை ஏலக்காய் மிளகு தோட்டத் தொழிலாளர்கள் அதிக அளவில் வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆஸ்பத்திரியின் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவில் எந்தநேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதனால் சிகிச்சை பெறுபவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது
இதனை தடுக்கும் விதமாக புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டது இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது உத்தமபாளையம் டிஎஸ்பி செங்கோட்டு வேலன் பங்கேற்று புறக் காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இது குறித்து டிஎஸ்பி கூறும்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது
இந்த புறக்காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார் அவசர உதவிக்கு புறக் காவல் நிலையத்தில் உள்ள போலீசாரை அழைக்கலாம் என்றார் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஜெ பொன்னரசன் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.