செய்தியாளர்: பா.சீனிவாசன், வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் திட்ட முகாமில் கீழ்பெண்ணாத்தூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர் வேல்முருகன் எழுதிய ‘தமிழில் விரைவாக எழுத, படிக்க வேண்டுமா..! எனும் நூல் வெளியீட்டு விழா தெள்ளார் வட்டாரக் கல்வி அலுவலர் தே.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் தரணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ம.புதூர் ஊ,ஒ.தொ.பள்ளித் தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவி, ஜோதிலட்சுமி, சரவணன், பெரும்பாக்கம் தலைமை ஆசிரியர் கோ.ஶ்ரீதர் ஆகியோர் பங்கேற்று இப்புத்தகம் மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளில் பயன்பாடுகளை தரும் என்று கருத்துரைகளை வழங்கி பாராட்டினர்.