கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி பல்லடம் வட்டாட்சியர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக கைகளில் பதாகைகளை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பியும் நடந்து சென்றனர்.
கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணியானது மங்களம் சாலை வழியே சென்று என் ஜி ஆர் ரோடு பகுதிக்கு வந்து மீண்டும் கல்லூரிக்கு சென்றடைந்தது நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் கல்லூரி முனைவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.