மொழிப்போர் தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் வி. செந்தில் பாலாஜி


தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25 தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்ச்சி கரூர் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகள் படங்களுக்கு மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து கரூர் மாவட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கவுரவப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *