குடியரசு தினத்தையொட்டி மதுரை ரயில் நிலையம், முக்கிய கோயில்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் மற் றும் ரயில்வே போலீசார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அப்போது, வெடிகுண்டு தடுப்பு பிரி வினர், மோப்பநாய் மற் றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்ய உள்ளனர்.
மேலும், ரயில் நிலையத்தில் நேற்று முதல் பார்சல் சர்வீஸ், கார் பார்கிங், டூவீ லர் பார்க்கிங் ஆகியவை முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. நடை மேடைகளில் ரயில்வே போலீசாருடன், ரயில்வே போலீசாரும் கண்காணிப் பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக மதுரை ரயில் நிலையத் தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நான்கு வாசல் களிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப் பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் பரி சோதனை செய்த பின்பு தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். இதேபோல், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில்,அழகர்கோயில் ஆகியவற் றிலும் போலீசார் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாட்டுத்தா வணி, பெரியார் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டிவி கேமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் விசாரித்து வரு கின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளில் ரோந்து வாக னம் சுற்றி கண்காணித்து வருகிறது.
மேலும், மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போடப்பட்டுள்ளது. பயணிகள் நன்கு சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக் கப்படுகின்றனர். மேலும் விமான நிலையத்தை சுற்றிலும், மத்திய பாதுகாப்பு படையிரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.