கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூரில் பொள்ளாச்சி சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் 1000. மேற்பட்ட மாணவர்கள் பயின்ற நிலையில் இன்று பள்ளி முடியும் நேரத்தில் பள்ளி வளாகத்துக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு புதருக்குள் மறைந்திருந்த சாரைப்பாம்பை உயிருடன் நீட்டனர் உயிருடன் மீட்கப்பட்ட பாம்பை காட்டுப் பகுதியில் விட்டனர். தனியார் பள்ளி வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் சிறிது நேரம் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.