காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுச்சாமி கோடீஸ்வரன் மற்றும் ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்காலிக அமைக்கப்பட்ட உணவு கடைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது அன்னதானம் வழங்கும் இடங்கள் சுமார் 8 மற்றும் தற்காலிக கடையில் சுமார் 33 கடையில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
மேற்படி ஆய்வின் போது அனைவரும் தற்காலிக பதிவு சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டது உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் தரமானதாக வாங்கி முறையாக சேகரம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணெயை ஊற்றி டாப் அப் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
உணவு வணிகர்களுக்கு RUCO பற்றிய விழிப்புணர்வு வழங்கப்ட்டது. மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், பூச்சி தொற்று இல்லாதவாறு இருக்கவும், தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும், பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும், உணவுப்பொருள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் உணவுப் பொருட்களை மூடி வைத்து விற்பனை செய்யவும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவுப்பொருள் கையாளுபவர்கள் தன் சுத்தம் கடைபிடிக்கவும் கையுறை, மற்றும் தலையுறை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.விழிப்புணர்வு notice வழங்க பட்டது