பாபநாசம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமான்,வள்ளி, தெய்வானை ஆகிய பரிவார தெய்வங்களுக்கு பால்,தேன், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான பொருட்களாலும் அபிஷேகம் செய்து திருகைலாய வாத்தியங்கள் முழங்க சிவனடியார்களின் திருமுறை வழிப்பாட்டுடன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஏற்பாடுகளை திருக்கயிலாய சிவபூதகணத் திருக்கூட்டம்
செய்திருந்தனர்.