கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து பேரணியாக சென்ற மழலை குழந்தைகள் போக்குவரத்து காவலர்களை போல் வேடமணிந்து இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு
கோவையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த பொதுமக்களுக்கு சிறுவர் சிறுமியர்கள் ஹெல்மெட் வழங்கி அறிவுரை கூறினர்…
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலாயா பப்ளிக் பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..
இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவர் சிறுமிகள் ஒருங்கிணைத்த பேரணி போத்தனூர் காவல் நிலையம் முன்பாக துவங்கியது.
இதில் போக்குவரத்து காவலர்கள் வேடமிட்ட சிறுவர்,சிறுமிகள் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி பேரணியாக சென்றனர்..
பேரணியை பள்ளி முதல்வர் வனிதா திருமூர்த்தி மற்றும் துணை முதல்வர் முத்துக்குமாரி ஆகியோர் துவக்கி வைத்தனர்..
பின்னர் போத்தனூர் பிரதான சாலையில் நின்றபடி சாலை பாதுகாப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் அதிகாரிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..தொடர்ந்து சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி அறிவுரை கூறினர்..
சிறுவர் சிறுமிகள் ஒருங்கிணைத்த இந்த சாலை விழிப்புணர்வு பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ..