எம்ஜிஆர் உலக பேரவை சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா கம்பன் கலையரங்கில் வருகிற 2-ம் தேதி நடைபெறுவதாக பேரவையின் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் முருகு. பத்மநாபன் தெரிவித்தார்
இது தொடர்பாக புதுவை தமிழ் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக எம்.ஜி.ஆர் பேரவை நிறுவனர், ஒருங்கிணைப்பாளர் முருகு.பத்மநாபன் உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் 108-வது எம்.ஜி.ஆர் பிறந்தநாள் திருவிழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் வருகிற 2-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முருகு. பத்மநாபன் எம்ஜிஆர் பிறந்தநாள் திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மக்கள் திலகத்தின் நிலைத்த புகழுக்கு பெரிதும் துணை நிற்பது காதல் பாடல்களா அல்லது சமுதாயப் பாடல்களா என்ற தலைப்பில் கலக்கல் காங்கேயனின் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் புவனகிரி அழகு சுந்தரம் குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்வும் சென்னை ராஜாவின் கானா இசை தர்பார் ஆகியவையும் நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து மாமல்லன் சிலம்ப குழுவினரின் சிலம்பாட்டம் பொன்மனச் செம்மல் அறக்கட்டளை குழுவினரின் சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் அனைவரும் வருகை புரிந்து விழாவை ரசிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி எம்ஜிஆர் பேரவை,விழுப்புரம் எம் ஜி ஆர் பேரவை மற்றும் கடலூர் எம்ஜிஆர் பேரவை இணைந்து செய்கிறது என்று தெரிவித்தார் பேட்டியின் போது எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் பெருமாள், நாகராஜ், ராஜ்குமார், கேப்டன் ஜெயசுந்தரம், சிவப்பிரகாசம், குணசேகர், நீலகண்டன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஜெரினா ஆகியோர் உடன் இருந்தனர்.