புதுச்சேரி லாஸ்பேட்டை துரௌபதி அம்மன் ஆலய சொத்துக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காத, இந்து அறநிலையத்துறை கண்டித்து ருத்ர வன்னியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரி, லாஸ்பேட்டை அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவை ஆறு வாரங்களில் நியமிக்க உத்தரவிட்டிருந்தும், இதுவரை அந்த உத்திரவை, செயல்படுத்தாத இந்து அறநிலை துறை ஆணையரை கண்டித்தும், காலாவதியான அறங்காவலர் குழு நிர்வாகிகளால் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும்,இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் உரிய அனுமதி இன்றி கோவில் விஷயங்களை தன்னிச்சையாக முடிவெடுப்பதை கண்டித்தும் புதுச்சேரி ருத்ர வன்னியர் சங்கம் மற்றும் லாஸ்பேட்டை ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தட்டாஞ்சாவடி வி.வி.பி நகர் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்க 100-க்கும் மேற்பட்ட பட்டவர்கள் கலந்து கொண்டு, புதிய அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் திரௌபதி அம்மன் தேவஸ்தானத்தின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.