தென்காசி
தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் உலக அளவில் புகழ் பெற்ற கபடி வீரர் இராஜரெத்தினத்தை இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்
உலக அளவில் கபடி விளையாட்டில் சாதனை படைத்தவரும் 1987 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணியில் இடம் பெற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று இந்தியாவிற்கு வெற்றிக் கோப்பை பெற்று தந்தவர் 1990 ஆம் ஆண்டு சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கபடி விளையாட்டில் துணை கேப்டனாக பதவி ஏற்று அந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தந்தவர் பல்வேறு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்றவர் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு கபடி போட்டியில் மட்டுமே தங்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 1994 ஆம் ஆண்டு ஜப்பானில் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணியின் கேப்டனாக பதவியேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்தவர் 1994 ஆம் ஆண்டு இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை அன்றைய ஜனாதிபதியின் திருக்கரத்தால் பெற்ற முதல் இந்திய கபடி வீரர் முதல் தமிழக கபடி வீரர் என்ற பெருமை பெற்றவர் அனைவராலும் கபடி டைகர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அர்ஜுனா விருது பெற்ற பிறகு உலகம் முழுவதும் ரசிகர்களால் அர்ஜுனா இராஜரெத்தினம் என்று அன்புடன் அழைக்கப்பட்டு புகழப்பட்டவர்
உலகம் முழுவதும் உள்ள கபடி ரசிகர்களை தன் வீரமிக்க விளையாட்டால் தன்பால் ஈர்க்கச் செய்தவர் இவருடைய விளையாட்டு ரசிகர்களாக அரசியல் தலைவர்கள் சினிமா துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் பல்வேறு விளையாட்டை விளையாடிய விளையாட்டு வீரர்கள் ரசிகர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது
கபடி விளையாட்டில் இந்தியாவிற்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கும் பிறந்த ஊரான கணபதி புரத்திற்கும் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் பிறந்த சமுதாயமான நாடார் சமுதாயத்திற்கும் பெரும் புகழையும் பெயரையும் தேடித்தந்த கபடி டைகர் அர்ஜுனா விருது பெற்ற இராஜரெத்தினம் அவர்களை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து டி எண் யூ மாத இதழை கொடுத்து வாழ்த்து பெற்றனர் இவர்களோடு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் ஆனந்த் மற்றும் ராம்ஜி உடன் இருந்தனர்.