தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மாதிரி கிராமமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள காருகுடிகிராமம் தேர்வு செய்யப்பட்டு விவசாயத்திற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன, காருகுடி கிராமத்தில் தண்ணீர் வரவு செலவு அறிக்கை மற்றும் முடிவு எடுக்க உதவும் அமைப்பதற்கான (Water Budget and Decision Support System) கீழ் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்ட ம்) தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரி கிராம செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்கள் நெல் பயிர்களில் அதிக லாபம் பெற இ-நாம், பொருளீட்டுக்கடன் போன்ற திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். வேளாண் பொறியியல் துறை சார்ந்த உதவி செயற்பொறியாளர் பண்ணைகுட்டை மற்றும் மழைநீர் சேகரிப்பு முறைகளை எடுத்துரைத்தார். நீர் வளத்துறை பொறியாளர் காருகுடி கண்மாயில் உள்ள பிரச்சனைகளை பற்றி விவசாயிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டது.வேளாண்மை உதவி இயக்குநர் உரங்கள் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகளை எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் ப.அம்பேத்குமார் அவர்கள் தலைமையேற்று நடத்தினார் மற்றும் உடன் நம்மாழ்வார் வேளாண்மை கல்லுரி -நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சியினை சிறப்பாக நடத்தினர்.