தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் அதிகமாக உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மரத்தடியில் ஒதுங்கி உள்ளனர்.
இதை உடனடியாக கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கப்பட வேண்டும் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் நிற்கும் இடத்திற்கு தற்காலிகமான நிழற்குடகம் அமைக்கப்பட வேண்டும்.
2024 ஆண்டை விட 2025 ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது இப்போது ஆரம்ப காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு மதியம் 12:00 மணி முதல் 4:00 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதற்கு கூட தயங்குகின்றனர்.
இதனால் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வானிலை ஆய்வு மையம் தகவலின்படி தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது