சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் விமர்சியாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் சுமார் 3000 திறகும் மேற்பட்டோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் வந்து சுவாமி தரிசனம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டும் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கடந்த மாதம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
தினமும் உற்சவர் சந்திரசேகரர் சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார்.
கடந்த திங்கட்கிழமை அன்று காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் காலை நடைபெற்றது. இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
காலை 10. மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப் பட்டது.
கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது.
பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
பக்தர்கள் இனிப்புகள் மற்றும் தாலிக்கயிறு உள்ளிட்டவைகளை வழங்கினர் கோவிலை சுற்றியும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது
இந்த திரு கல்யாண வைபவத்தில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர் பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.