தென்காசி மாவட்டத்தில் தரமான மருந்துகள் 20 முதல் 90 % வரை குறைவான விலைக்கு விற்பனை-மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தென்காசி, மார்ச் – 14

தென்காசி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களில் தரமான மருந்துகள் (ஜெனரிக், சித்த மருந்துகள், ஆயுர்வேதம் மற்றும் மற்றும் அனைத்து வகை மருந்துகள்) மருந்துகளின் வகைக்கேற்ப 20% முதல் 90% வரை சந்தை விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 13 முதல்வர் மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 18 முதல்வர் மருந்தகங்களும் கீழ்க்கண்ட இடங்களில் 24.02.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். முதல்வர் மருந்தகங்களில் தரமான மருந்துகள் (ஜெனரிக், சித்த மருந்துகள், ஆயுர்வேதம் மற்றும் மற்றும் அனைத்து வகை மருந்துகள்) மருந்துகளின் வகைக்கேற்ப 20% முதல் 90% வரை சந்தை விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 25 சதவீதம் வரை கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் கடையநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கடைஎண் 3, சந்தைவீதி. கடையநல்லூர், 6369850488. பண்பொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். பாறையடி தெரு. பண்பொழி, 8144560042. சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். பள்ளிவாசல் தெரு. சாம்பவர் வடகரை, 6380621353. இராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பள்ளிக்கூடத்தெரு, இராயகிரி, 8438961346. சிவகிரி கூட்டுறவு பண்டக சாலை, ராஜாஜி மெயின்ரோடு, 8072058463. புளியங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். சுப்பிரமணியசாமி சன்னதி கோவில் தெரு, 7695977734. சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்கம், இராஜபாளையம் மெயின் ரோடு. 6385780349. சேர்ந்தமரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மெயின்ரோடு, சேர்ந்தமரம். 8248992748. திருவேங்கடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், குருவிகுளம் மெயின் ரோடு, 9500648237. இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 26/12, வீதி எண்.5 மெயின்ரோடு, அச்சன்புதூர், 9092940583. சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 2,8/3வது தெரு. சுரண்டை, 8248491488. தென்காசி செங்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தெற்கு ரதவீதி, செங்கோட்டை, 8300187633. சங்கரன்கோவில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தெற்கு ரதவீதி, சங்கரன்கோவில், 8870883955.

தொழில் முனைவோர்கள் பிர்தெளஸ் முகமது அபுபக்கர், 141/19, மெயின்ரோடு, குத்துக்கல்வலசை, தென்காசி. 8754795599. சாகுல் ஹமீது கல்வத்கனி, முடுக்கு விநாயகர் கோவில் தெரு, கனி மெடிக்கல்ஸ் அருகில், தென்காசி, 9842171920. ஷைனுள் ரெஃபானா, முப்புடாதி அம்மன் கோவில் தெரு, தமிழ்நாடு ஸ்டோர் அருகில், கடையநல்லூர், 9514300724. சுமதி முருகேசன், குற்றாலம் செங்கோட்டை ரோடு- கணபதி நகர், வல்லம், 9384213381, ஐஸ்வர்யா, 2/8/39 பாக்கியம் நகர், தெற்குமேடு, 7010401292. ஜமுனா, RC சர்ச் தெரு மெயின்ரோடு. புதுப்பட்டி, 9360235624. வணிதா செல்வராஜ், மெயின்ரோடு, இரட்டைகுளம், 9043351922. கனகா, வீராணம் ரோடு, வீரகேரளம்புதூர், 9942091403. சிவா, புதிய பேருந்து நிலையம் எதிர்புறம். ஆலங்குளம், 7402539954. அராபத், பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் அருகில், இடைகால், 9514300734. குமார். மெயின்ரோடு, குலயநேரி, 8610207576. அல்சுவைரியா பேகம், 11/2 மெயின்ரோடு கபூர் இன்டன்கேஸ் அருகில், வாசுதேவநல்லூர், 9994050064. ஜோதிமுத்து, 1/11, ராஜாஜி ரோடு, சிவகிரி, 9842154886, ரேவதி ராஜேந்திரன், வணிக வைசியா காம்ப்ளக்ஸ், TN புதுக்குடி, புளியங்குடி, 9994037717. திரவியம், 65/1, தெற்கு ரதவீதி, சங்கரன்கோவில், 9788135356. கவிதா, மெயின்ரோடு. சங்கரன்கோவில், 9976613800. ரமேஷ். 3/178 மேற்கு ரத வீதி. குருவிகுளம், 9842121419. அபுதாகீர், அக்ஸா பள்ளிவாசல் அருகில் பேட்டை, கடையநல்லூர், 7358633851.

இங்கு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை சலுகை விலையில் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *