திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயமானது நடைப பெற்று வருகிறது.
பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பே சாமிநாதன் கலந்துகொண்டு ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பந்தயத்தில் 250 க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டனர் மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொள்ள வரும் நபர்களுக்கு மதிய உணவானது தயார் செய்யப்பட்டுள்ளது. 200 மட்டும் 300 மீட்டர் தொலைவினை கணக்கில் கொண்டு இந்த போட்டியானது நடத்தப்பட்டு வருகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரேக்ளா வண்டிகள் போட்டியில் பங்கேற்க கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் இந்நிகழ்ச்சியினை உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *