திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமரச நாள் (Mediation Day) தொடக்க விழா திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,மத்தியஸ்தர்கள்,SREE VEE கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள்,நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி. முத்துசாரதா சமரச விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து,சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும்,சமரசம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *