தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் கடந்த 4.4.2025 அன்று SI பணியிடங்கள் 1299 ஐ நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட வில்லை.SI கனவில் உள்ள தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால் சிலர் வயது வரம்பு சலுகை கோரி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.சிலர் இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசியல் தலைவர்கள் வயது வரம்பில் சலுகை கோரி வருகின்றனர்.TNPSC கடந்த 1.4.2025 அறிவித்த குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பில் கூட DSP பணிக்கு 39 வயது வரை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது.DSP பணிக்கு மட்டும் 39 வயது வரை வழங்கியுள்ளதை போல் SI பணிக்கு மட்டும் ஏன் 39 வயது வரை தேர்வு எழுத வாய்ப்பு வழங்க கூடாது.

ஏராளமான தேர்வர்கள் இதற்காகவே காத்திருக்கின்றனர். மாணவர்களின் நலனில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியதே. அது மட்டுமின்றி 10 மசோதாக்கள் விசயத்தில் உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் SI தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்க தமிழக முதல்வர்,தமிழக அரசு சீருடை பணியாளர் குழுமம் முன் வர வேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *