இராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான், கீழக்கரை ECR சாலையில் காவல்துறை குடியிருப்பு பகுதி அருகே நேற்றிரவு பத்து வாலிபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் பத்து நபர்களும்
அடிபட்டு கீழே விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ் கான் வர்த்தக சங்கம் மாநில துணை செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் படுகாயம்அடைந்த நபர்களை காப்பாற்றி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.