திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை 23- வது மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநாட்டு கொடியை மூத்தவர் குஞ்சையா ஏற்றி வைத்தார்.
மறைந்த முன்னாள் மூத்த தலைவர்கள், தொண்டர்களின் அஞ்சலி தீர்மானத்தை வினோத் நிறைவேற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா இன்றைய அரசியல் அரசியல் நிலை குறித்து பேசினார். கிளை செயலாளர் தேசிங்கு வேலை அறிக்கையினை யும், வரவு, செலவையும் வாசித்தார்.
வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் கிளை செயலாளர் பாக்யராஜ், துணை செயலாளர் வினோத், பொருளாளர் சந்திரமோகன் ஆகிய புதிய பொறுப்புகளை அறிவித்து, எதிர்கால கடமை குறித்து பேசினார்.
மாநாட்டில் 01. பாப்பாக்குடி வருவாய் கிராமத்திற்கு விஏஓ அலுவலகம் கட்டித்தர வேண்டும். 02. பாப்பான் குளத்தில் படித்துறை கட்டித்தர வேண்டும். 03. நரிக்குடி குடியானத் தெரு மற்றும் ஆதிதிராவிடர் தெரு மயான சாலை அமைத்து தர வேண்டும். 04. நரிக்குடி கிராமத்தில் குடிநீர் உப்பு கலந்து வருவதால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.கண்ணையன், கே.எஸ்.விஜயகுமார், எம்.வேம்பையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் புதிய செயலாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.